கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துமுகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG) அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106′ என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இலக்கத்தினூடாக கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மாலுமிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு உடனடி மற்றும் நேரடி தொடர்பை வழங்குவதன் மூலம் (SLCG) செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேசிய நோக்கங்களை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.