NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கலான் லுக்கில் விக்ரம் – வைரல் பிக்

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாகநடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.

தங்கலான் படத்தில் ‘கங்கம்மா’ எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். ‘தங்கலான்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

திரைப்படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டும்,மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் சம்பந்தமாக எந்த அப்டேட்டுகளும் சமீப காலமாக வரவில்லை. இந்நிலையில் சீயான் விக்ரம் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வருகிறது. தலையில் முண்டாசுடன், மூக்குத்தி அணிந்தும் பார்க்கவே படும் பயங்கராமாக இருக்கிறார்.

விக்ரம். அப்புகைப்படத்திற்கு எக்ஸைட்டிங் டைம்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles