NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தயவு செய்து ஊடக கண்காட்சிகளை. நிறுத்திவிட்டு மக்களுக்காக பணியாற்றுங்கள்- சாகர காரியவசம்

மிகவும் திட்டமிட்ட வகையில் எதிரிகள் மற்றும் நாட்டின் பலம் வாய்ந்த வர்த்தகர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (2024.10.07) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம்,

 “எதிர்க்கட்சியில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் ஊடக கண்காட்சிகளை நடத்தலாம்.  அந்த நேரத்தில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை.  அவர்கள் அரசாங்கத்தை எப்படி வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம்.  அண்மைக்காலமாக இந்த நாட்டின் வாக்காளர்கள் நீண்ட காலமாக சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பத் தொடங்கியிருப்பதை நாம் காண்கிறோம்.  ஆனால் அரச அதிகாரத்தைப் பெறுவதற்கு எத்தகைய பொய்களைப் பயன்படுத்தினாலும், அந்த அரச அதிகாரத்தைப் பெற்ற பின்னர், பொய்யைக் கூறி அரச அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என நம்பப்படுகிறது.  மற்றவர்களை விமர்சித்தும், எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்து ஊடக நிகழ்ச்சிகள் போட்டும் ஆட்சியை நடத்த முடியாது. என தெரிவித்தார்.

Share:

Related Articles