NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாண் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை கோதுமை ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால்இ நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் எனவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு கலந்துகொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles