NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மீண்டும் பலத்த பாதுகாப்பு..!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவததையடுத்து இன்று திங்கட்கிழமை (28) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்த பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25 ம் திகதிக்கும் 28 ம் திகதிக்கும்  உட்பட்ட நாட்களில்  வெடிகுண்டு வைத்து தகர்க போவதாக கடந்த வியாழக்கிழமை பொலிசாருக்கு கிடைத்த பதிவு தபால் ஒன்றையடுத்து பொலிசார் உடனடியாக பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் 8 மணிவரை குண்டை தேடி மேப்பநாய் சகிதம் தேடுதல் நடாத்திய பின்னர் நீதிமன்றத்துக்குள்  செல்வோரை பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்

இதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (28) விசேட அதிரடிப்படையினர் மேப்பநாய் சிகிதம் அன்றைய போல தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் உள நுழைய தடைவிதித்ததுடன் அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுதிக்கப்பட்டதுடன் கட்டிட தொகுதியை சுற்றி பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுன் புலனாய்வு பிரிவினரும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதேவேளை வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக பொலிசார் புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவது  குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles