யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதிலையே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் , விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
