(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
48,000 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
12 மாவட்டங்களை சேர்ந்த 40 பிரேதச செயலாளர் பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட 156,000 பேருக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் விலங்குகளுடன் தொடர்புடைய அமைப்புகள் நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் குடிநீர் வழங்குவதற்காக அரசாங்கம் இரண்டு மில்லியனை செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.