NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

JIO CINEMA OTT தளத்தின் அதிவேக வளர்ச்சி

முகேஷ் அம்பானி அவர்களின் OTT தளமான JIO CINEMAவின் அதிவேக வளர்ச்சியானது மற்ற OTT தளங்களான HOTSTAR, AMEZON,NETFILX போன்ற OTT தளங்களை முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முகேஷ் அம்பானியின் JIO CINEMA OTT தளம் அதன் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா திட்டங்களை வெளியிட்டது. ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் ஜியோ சினிமா ஓடிடி தளங்களின் அனைத்து வெப் சீர்ஸ், படங்கள் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம். 

NETFILX OTT நிறுவனம் தற்போது ஆண்டு சந்தா திட்டத்தை வழங்குவது இல்லை. அதற்கு மாறாக 149 ரூபாய் முதல் 649 ரூபாய் வரையிலான திட்டங்கள் உள்ளது. AMEZON PRIME வீடியோ OTT தளத்தின் ஆண்டு சந்தா மதிப்பு தற்போது 1499 ரூபாயாக உள்ளது.

DISNEY PLES HOTSTAR OTT தளத்தின் ஆண்டு சந்தாவும் 1499 ரூபாயாக உள்ளது. JIO CINEMA வின் பிரீமியம் சந்தா ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களின் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் அம்சங்களை கொண்டதாக உள்ளது.

புதிய தொடர்களை ஸ்ட்ரீம் செய்யும் போர்கள் வரவிருக்கும் மாதங்களில் இருந்து தொடங்கவுள்ளது. ஜியோ சினிமாவின் சவால்களை மற்ற ஓடிடி தளங்களான அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றது பார்க்கலாம்.

ஜியோ சினிமாவில் வந்திருக்கும் புதிய வெப் தொடர்கள் மூலமாக ஓடிடி உலகம் பெருமளவு போட்டியை சந்திக்கவுள்ளது. 

Share:

Related Articles