நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த வெப்பம் நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் சோர்வு மற்றும் நீரிழப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வயோதிபர்கள் மற்றும் நோயுற்றவர்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், இந்த நிலையில் போதியளவு தண்ணீர் அருந்துவது அவசியமானது எனவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.