NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை – நுகர்வோர் விவகார அதிகாரசபை

இணையவழி ஊடாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இணையத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் கீரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் எழுந்துள்ளதாக நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

அத்தோடு, அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விடயங்களை முற்பதிவு செய்வதிலும் பெறுவதிலும் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் தெரிவித்துள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles