NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சைஃப் அலிகான் குறித்து ‘சக்திமான்’ முகேஷ் கண்ணா விமர்சனம்

ராவணனாக நடிக்கவைக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா? என்று ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து முகேஷ் கண்ணா வீடியோ ஒன்றில்  கேள்வி எழுப்பியுள்ளார்.

ராவணன் பயங்கரமான ஆளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பண்டிட். ராவணனை ஒருவரால் எப்படி இப்படி கற்பனை செய்து வடிவமைக்க முடியும் என்று அதிர்ச்சியாக உள்ளது.

படம் அறிவிக்கப்பட்டபோது, அந்த கதாபாத்திரத்தை நகைச்சுவையாக மாற்றுவேன் என்று சைஃப் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் காவியத்தின் கதாபாத்திரங்களை மாற்ற நீ யார் என்று நினைத்தேன். உண்மை என்னவென்றால், ராவணனை நகைச்சுவையாக காட்ட தயாரிப்பாளர்கள் முயன்றுள்ளனர் என்று முகேஷ் கண்ணா பேசியுள்ளார்.

எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகளைத் தாண்டி படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles