NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை கொழும்பில் நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles