NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ இயக்குநர்

சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆடம்ஸ் அறிமுகமானார். இவர் சன் டிவியில் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கினார். இவரின் ஜாலியாக பேசும் திறமையும் , முக பாவனையும் மக்கள் மனதை கவர்ந்தது.

பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பயணம் செய்தார்,  சன் டிவியின் சிவ சக்தி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்,  தென்றல், முந்தானை முடிச்சு போன்ற சீரியல்களில் நடித்தார்.

பிரபல தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் படத்தின் திரைக் கொண்டாட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஆடம் தொகுத்து வழங்குவார். பின் படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது அவர் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். கேன் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் நடித்து இருக்கும் முன்னணி கதாப்பாதிரங்களின் முகத்தை வைத்து ஒரு வித்தியாசமான ஃபர்ஸ் லுக்காக உருவாக்கியுள்ளார்.

கோவை சரளா, கலையரசன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், அக்ஷரா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது என்பது குறிப்படத்தக்கது.

Share:

Related Articles