NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பன்றிகளை கொண்டு செல்வதற்கான சுகாதார சான்றிதழ் கட்டாயம்!

பரவிவரும் வைரஸ் காரணமாக பன்றிகளை கொண்டு செல்வதற்காக சுகாதார சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமையஇ பிரதேசத்துக்கு பொறுப்பான கால்நடை வைத்தியரிடமிருந்து சுகாதார சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இ தற்போதைய நிலைமையை கட்டப்படுத்துவது தொடர்பில் பன்றி பண்ணை உரிமையாளர்களுடன் இன்று விசேட கலந்துரையால் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் பன்றிகளுக்கு வைரஸ் தாக்கங்கள் ஏற்பட்டு வருவதாகவும் மேல் வடமேல் மற்றும் வடமத்திய மாகாண உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பல பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே நோயினால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Related Articles