NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான ‘கல்கி 2898’ ட்ரெய்லர்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது.

அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார்.

பிரமாண்டமான செட்டு மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.

நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது, இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப், பறக்கும் தட்டுகள், கோட்டைகள் என மேக்கிங் மிரட்டுகிறது.

பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக கமல்ஹாசனின் தோற்றத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Share:

Related Articles