NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளை யால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு..!

மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளை யால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம்    இன்றைய தினம் புதன்கிழமை(09) மக்களின் பாவனைக்காக கையளித்துள்ளனர்.

பிரதான விருந்தினராக கலந்து கொண்ட முசலி பிரதேசச் செயலாளர் ரஜீவ் குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா,கொக்குப்படையான் கிராம மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுத்தமான குடி நீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமது கிராமத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு குறித்த கிராமத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகள் ஊடாக லைகாவின் ஞானம் அறக்கட்டளை இடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக மன்னாரில் உள்ள லைகாவின் ஞானம் அறக்கட்டளை யின் பணியாளர்கள் ஊடாக குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டு,இன்றைய தினம் புதன்கிழமை(9) பயனாளிகளிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

மன்னார் லைகாவின் ஞானம் அறக்கட்டளை யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர்,கிராம அலுவலர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து குறித்த நீர் விநியோகத் திட்டத்தை வைபவ ரீதியாக பயனாளிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles