வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெஃப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும் என்பதுடன், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும் என்றும் பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது