காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த வகையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் மத்திய காஸாவின் இரண்டு அகதி முகாம்களைச் சேர்ந்த 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தென் பகுதி காஸாவின் ரபா நகருக்குள் இஸ்ரேலிய பீரங்கிகள் அடுத்தடுத்து முன்னேறிச் செல்லும் வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும். ரபாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீரங்கிகளில் இருந்தும் போர் விமானங்களில் இருந்தும் “குண்டுகள் மழைபோலப்” பொழிந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ரபாவின் மேற்கு வட்டாரத்தில் அல்-சுல்தான் , அல்-இஸ்பா , ஸுருப் ஆகிய பகுதிகளிலும் நகரின் மையப் பகுதியில் உள்ள ஷாபோராவிலும் பீரங்கிக் குண்டுகள் மூலம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், எகிப்துடனான எல்லைப் பகுதியையும் முக்கியத்துவம் வாய்ந்த ரபா எல்லை கடக்கும் பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.