தமிழகம் – கள்ளக்குரிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசு மீது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் குற்றம் சுமத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று” அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆம உயர்ந்துள்ளது.