ஐஸ்வர்யா ராய் Bollywood, Kollywood, என அடுத்தடுத்த மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பின்பு முத்தக்காட்சியில் காட்சியில் மற்றொரு நடிகருடன் ஐஸ்வர்யா ராய் நடித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளையும் அவரது குடும்பத்தில் புயலையும் ஏற்படுத்தியதாக தற்போது பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் தனித்தனியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னுடைய முன்னாள் காதலர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை ஐஸ்வர்யாராய் மறுத்ததுடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார், ஆயினும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார் அவர்கள் இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் குடும்பத்தினர் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் பிரிவை விரும்ப மாடடார்கள், அவர்கள் இணைந்து வாழும்படி பேசி முடிவெடுப்பார்கள் என்றே தான் கருதுவதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.