NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் நாளை விசேட அறிவிப்பு – சரத் பொன்சேகா!

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் டெல்லி சென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்திவிட்டு நேற்று மாலை நாடு திரும்பினார்.

இந்நிலையில் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் நாளை 9 ஆம் திகதி அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.

இந்திய பயணத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர்இ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் தூதுரக மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

“ நாட்டு மக்களுக்கு 9 ஆம் திகதி உரையாற்றவுள்ளேன்” அந்த உரைமூலம் எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி தெளிவுபடுத்துவேன் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles