ஜப்பானில் தொடர்ச்சியாக பதிவாகிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டு அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட ஆழிப்பேரலை எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கியூஷு தீவு அருகே 7.1 ரிக்டர் மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இதனால் ஜப்பானின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டதுடன், சுற்றுலாத்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் தொடர்ச்சியாகப் பதிவாகும் நில அதிர்வு குறித்து ஆராயப்பட்டது.
அதனையடுத்து, மீண்டும் பாரிய நிலநடுக்கம் பதிவாவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விடுக்கப்பட்டிருந்த ஆழிப்பேரலை எச்சரிக்கையும் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.