பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நேற்று(04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
குறித்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தைந்து பெண்களும், பதினெட்டு ஆண்களும் இச்சம்பவத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.