NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

PAYEE வரியை குறைக்க தீர்மானம்!

PAYEE வரி எனப்படும் உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த பிரேரணையின் படி, மாதாந்தம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் வரி 500 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 3 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 7,000 ரூபாய் வரி 3,500 ரூபாவாக குறைக்கப்பட்டு 3,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 76 ஆயிரம் ரூபாய் வரி 12 ஆயிரத்து 500 ரூபாவால் குறைக்கப்பட்டு 63 ஆயிரத்து 500 ரூபாவாக வசூலிக்கப்படும். மாதாந்தம் 6 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர் மாதாந்தம் செலுத்தும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரி 12 ஆயிரத்து 500 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 500 ரூபாவாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles