மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பன்றிகள் இடையே பரவும் வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருதாக அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தம் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.