யாழ்ப்பாணம், தவசிகுளம் – கொடிகாமம் பகுதியில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முற்பகல் மாற்றப்பட்டுள்ளது,
எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.