உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளியாகலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விவகாரங்கள் தொடர்பில் விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.