கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைக்கான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப்பரீடசைக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
20 பரீட்சை நிலையங்களை 15 நாட்களுக்குள் ஒரு கண்காணிப்பு அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
இதற்கிடையில், இந்த ஆண்டு, பரீட்சை நிலையத்தின் பிரதான தலைமை கண்காணிப்பாளர் மற்றும் மேலதிக தலைமை கண்காணிப்பாளர் மாத்திரமே தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை பரீட்சை நிலையத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.