அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்க அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
முன்னதாக, நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் தற்போது, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு குறித்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.