NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பத்து நாட்களில் 578 அரிசி ஆலைகளில் சோதனை..!

நாடளாவிய ரீதியில் கடந்த பத்து நாட்களில் 578 அரிசி ஆலைகளில் சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த குறைபாட்டிற்கான நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles