உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஈபிள் டவரில் உள்ள மின்தூக்கியில் முதல் தளத்திற்கும் 2ஆவது தளத்திற்கும் இடையே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அணைத்துள்ளனர்.
அதேவேளை, ஈபிள் டவர் பகுதிக்கு வருகை தந்திருந்த 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.