NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Pre Booking வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ள ‘விடாமுயற்சி’

2023ஆம் ஆண்டு பொங்கல் எப்படி அஜித் இரசிகர்களுக்கு திருவிழாவாக துணிவு படம் அமைந்ததோஇ அதே போல் 2025ஆம் ஆண்டு விடாமுயற்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் சவடீகா எனும் பாடல் வெளிவந்து வைரலானது. இந்த பாடலில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், Pre Booking பட்டையை கிளப்பி வருகிறது.

வெளிநாடுகளில் இப்படத்தின் Pre Booking நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுவரை ரூ. 36 லட்சம் வசூல், Pre Booking மூலம் வந்துள்ளது.

இதன்மூலம் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனை படைக்கும் என கூறுகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles