இந்த வாரம் OTT தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.
‘ரீயூனியன்’
‘ரீயூனியன்’ என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் நடைப்பெற்ற கொலையை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த படமாகும்.
இந்த படத்தில் நினா டோப்ரேவ், ஜேமி சுங், சேஸ் க்ராபோர்ட், பில்லி மேக்னுசென் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் மீண்டும் இணைந்து, அந்த கொலையை செய்த கொலைகாரனை கண்டுபிடிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் கடந்த ஜனவரி முதலாம் திகதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.
‘தி பிளாக் ஸ்விண்ட்லர்’
ஜப்பானின் ‘மங்கா’ தொடரை அடிப்படையாகக் கொண்டு, குரோசாகி என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரம், தனது குடும்பத்தை ஏமாற்றி மோசடி செய்பவர்களை பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் திகதிநெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
‘உப்பு புளி காரம்’
எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகிய தொடர் ‘உப்பு புளி காரம்’. இத்தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, பரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர்களை அடுத்து ஒளிபரப்பான உப்பு, புளி, காரம் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தொடரின் இறுதி எபிசோடு கடந்த 2 ஆம் திகதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.