கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.
இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.
கடந்த மாதம் 7-ந்தேதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது போப் பிரான்சிஸ் தவறி விழுந்ததில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.