NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரிப்பு!

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர்.

இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது.

ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலைகளிலேயே ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles