உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
![](https://tamilfm.online/wp-content/uploads/2025/02/image-1-1024x576.png)
அத்தோடு, மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளை மறுதினம் (12.02.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.