இஸ்ரேல் – காஸா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப் காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை (15) மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன் என கூறியுள்ளார்.
அதேவேளை காஸாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.