சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களை விடுதலை செய்யும் சட்டமா அதிபரின் முடிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள பின்னணியில் தமிழர் தாயகங்களில் இடம்பெற்றிருந்த கொலை சம்பவங்களுக்கும் தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தமிழர் தாயகங்களில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரது மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பிலும் நீதி கோரி தமிழர் தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.