2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி, 7 நாட்கள் நீடித்தது.