பொரளை மயானத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில், கிரிக்கெட் வர்ணனையாளரான பிரையன் தோமஸின் மரபணு அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று அரசாங்க இரசாயான பகுப்பாய்வாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான கணிப்புகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோலை செய்யப்பட்ட ஷாஃப்டருக்கு அருகில் இருந்த தண்ணீர் போத்தல், கழுத்தில் நெரிக்கப்பட்ட கேபிள் வயர், இரு கைகளையும் கட்டியிருந்த பட்டி ஆகியவற்றில் இருந்து இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் இருப்பதாக அரசாங்க பகுப்பாய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அந்நியர்களின் மரபணு மாதிரிகளை பொரளை மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் உட்பட 4 பேரின் மரபணுவுடன் உடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவர்களுடன் எந்த ஒப்பீடும் இல்லை என்ற உண்மையை இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.