NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்!


(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கான வசதிகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நவீன தேவைகளை கருத்திற் கொண்டு அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அனைத்து பிரஜைகளுக்கும் பாடசாலைகளின் சேர்க்கையின் போது, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுகொள்ளும் போது, திருமணத்தைப் பதிவு செய்தல் மற்றும் கடவுச்சீட்டைப் பெறும் சந்தர்ப்பங்களில்  பிறப்புச் சான்றிதழ் தேவையென்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles