NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓரினச்சேர்க்கைக்கு எதிராக உகண்டாவில் புதிய சட்டம் – மரண தண்டணை அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உகாண்டாவில் ஓரின சேர்க்கைக்கு எதிராக புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அதில் அந்நாட்டின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி கையெழுத்திட்டுள்ளார்.

உகாண்டா நாட்டில் கடந்த சில மாதங்களாக ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக, பல கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், ஓரினச்சேர்க்கைக்கு எதிராக புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இதை அமுல்படுத்தும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி அந்த சட்டமூலத்தில் கையொப்பம் இட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி ஓரின சேர்க்கையாளர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்பவர்களை, குற்றவாளியாக அரசு எடுத்து கொள்ளாது எனவும், ஆனால் ஓரின சேர்க்கையாளர்கள் உடலுறவில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை சிச்சயம் வழங்கப்படும் என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மோசமாக உடலுறவில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என யோவேரி முசெவேனி அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

‘ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான இந்த சட்டம், உலக நாடுகளின் மனித உரிமை மீறல்’ என்று ஜோ பைடன் உகாண்டா அரசை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் உகாண்டாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு மனித உரிமை மீறல்கள், அல்லது ஊழலில் ஈடுபடும் நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது பற்றியும், நிர்வாகம் பரிசீலிக்கும் என்று அவர் ஜோ பைடன் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘உலகிலேயே இது மோசமான சட்டம்’ என்று, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆணையர் வோல்கர் டர்க் கண்டனம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles