இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் தனஞ்சய த சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் Fazalhaq Farooqi மற்றும் Fareed Ahmad Malik ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 269 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் இப்ராஹிம் ஷட்ரான் 98 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் கசுன் ராஜித இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.