(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
முதலாம் தரத்திற்குள் நுழைந்த மாணவர்களிட் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் நடத்திய கண,; பல் மற்றும் காதுகளின் முதற்கட்ட பரிசோதனையின் போது 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் கண் பார்வை குறைப்பாடு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பிள்ளைகள் அழும் போது ஆறுதல் கூறவும், உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும் முன்பள்ளி வயது முதலே பெற்றோர்கள் கைத்தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறையினர் மற்றும் ஆசிரியர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது செய்யக்கூடாத ஒன்று எனவும் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் தலையீட்டில் பிள்ளைகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தி அருகில் உள்ள வைத்தியசாலைக்கு உரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைப் பாவிப்பதே சிறு பிள்ளைகளின் கண் கோளாறுகளுக்குக் காரணம் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார நேற்று (07) இதனை தெரிவித்துள்ளார்.