NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா இன்று முதல் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (19) நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும் 4 ஆம் திகதி அனடறு தெப்போற்சவம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles