(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பிரசேதங்களுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையிலான 8 மணி நேர நீர் வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படிஇ பேலியகொடஇ வத்தளைஇ ஜ-எலஇ கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள்இ களனிஇ பியகமஇ மஹரஇ தொம்பேஇ கட்டானைஇ மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையில் சில பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடுஇ நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.