NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லாஃப் – லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம்!

ஒரு மாதத்திற்குள் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக இருக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 350 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டுமென நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை இரண்டு பாகங்களின் கீழ் சமன்படுத்த வேண்டும் என்றார்.

12.5 கிலோ கிராம் லிட்ரோ மற்றும் லாஃப் சிலிண்டருக்கும் இடையில் 708 ரூபா வித்தியாசம் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அவ்வாறான வித்தியாசம் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Share:

Related Articles