(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்த ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஒருவரே இன்று (27) காலை உயிரிழந்துள்ளார்.
இந்த நாட்களில் அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பது பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.