NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளுர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்த போதிலும், உள்ளுர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு சபை பால் உற்பத்தியை 2,599,617 லீற்றராக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 சதவீத அதிகரிப்பு என பால் உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது, இலங்கையின் பால் உற்பத்தி 35 – 40 சதவீதமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் தேவையான திரவப் பால் உற்பத்தியில் 50 சதவீதத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்காகும்.

இந்நிலையில், நாட்டில் திரவ பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால், பால் மா இறக்குமதியை நிறுத்துமாறு இந்த நிறுவன அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டுக்குத் தேவையான பாலில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இருந்து பெறப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டில் திரவப் பால் உற்பத்தி அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்குமாறு மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பால்மா இறக்குமதி தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles