(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் நடந்த புகையிரத விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா புகையிரத நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்ற பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு நவாப்ஷா அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.